ADDED : நவ 23, 2024 06:51 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பஸ் படியில் நின்று பயணம் செய்ததை தட்டிக்கேட்ட டிரைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுாரைச் சேர்ந்தவர் தமிழ், 36; விழுப்புரம் - கடலுார் செல்லும் தனியார் பஸ் டிரைவர். இவர், கடந்த 20ம் தேதி பணியில் இருந்த போது, விழுப்புரம் அடுத்த சாலை அகரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் ராகுல்ராஜ், 20; அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 23; ஆகிய இருவரும் கோலியனுாரில் இருந்த பஞ்சமாதேவிக்கு பஸ் படியில் நின்று பயணம் செய்தனர்.
இருவரையும் உள்ளே வரும்படி டிரைவர் தமிழ் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த இருவரும், டிரைவர் தமிழை தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, ராகுல்ராஜ், ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

