ADDED : நவ 06, 2024 05:43 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெண்ணைத் தாக்கிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சித்தாத்துார் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி வசந்தி, 37; உறவினர் வசந்த், 28; தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார், 22; இவர்கள் பழைய பைக்குகளை வாங்கி, விற்கும் தொழில் செய்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக வசந்த் தனியாக பிரிந்து வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில், வசந்த் தனது ஊரில், ராம்குமாரிடம் யாரும் பைக் வாங்க வேண்டாம் என கூறி வந்துள்ளார். இதனையறிந்த ராம்குமார் தனது ஆதரவாளர்கள் யோகி, 21; பாரதிதாசன், 21; விக்னேஷ், 23; ஆகியோருடன் நேற்று முன்தினம் வசந்தி வீட்டிற்குச் சென்று தகராறு செய்து, வசந்தியையும், அவது 14 வயது மகளையும் திட்டி, தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, ராம்குமார், விக்னேைஷ கைது செய்தனர்.