ADDED : டிச 10, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வி.ஏ.ஓ.,வை தாக்கிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனந்துார் கிராமத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதி மக்களுக்கு வி.ஏ.ஓ., வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த் துறையினர் கடந்த 6ம் இரவு நிவாரணம் வழங்கினர்.
அப்போது அதே பகுதியை சார்ந்த ஆறுமுகம், கண்ணன், தமிழ்மணி, சிரஞ்சீவி ஆகிய 4 பேர் மற்ற பகுதிகளுக்கு அதிக நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு எங்களுக்கு அரிசி மட்டும் வழங்குகிறீர்கள் எனக் கேட்டு வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர்.
இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார், 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து நேற்று கண்ணன், 39; தேவநாதன் மகன் சிரஞ்சீவி, 20; ஆகிய இருவரை கைது செய்தனர்.