/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
/
வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
ADDED : டிச 13, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வேன் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் அடுத்த எஸ்.ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 20; வேன் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு தன்னுடைய வேனில் விக்கிரவாண்டி பால் சொசைட்டி எதிரே வந்தபோது, கக்கன் நகரைச் சேர்ந்த அஜய், 24; ராம்குமார், 40; ஆகியோர், வேன் தங்கள் மீது மோத வந்ததாக கூறி வேன் கண்ணாடியை உடைத்து அய்யப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து அஜய், ராம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.