/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாகனங்களின் கண்ணாடி உடைப்பு கோட்டக்குப்பத்தில் 2 பேர் கைது
/
வாகனங்களின் கண்ணாடி உடைப்பு கோட்டக்குப்பத்தில் 2 பேர் கைது
வாகனங்களின் கண்ணாடி உடைப்பு கோட்டக்குப்பத்தில் 2 பேர் கைது
வாகனங்களின் கண்ணாடி உடைப்பு கோட்டக்குப்பத்தில் 2 பேர் கைது
ADDED : நவ 07, 2025 12:55 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை மதுபோதையில் சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் குட்டவாப்பு தெருவைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 41; இவருக்கு சொந்தமான ஸ்விப்ட் கார், சரக்கு வேன் வாகனங்களை நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். சற்று நேரத்தில் கண்ணாடியை உடைக்கும் சத்தத்தை கேட்டு வெளியே வந்து பார்த்தார்.
அப்போது, 3 பேர் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனை தட்டிக்கேட்ட சாதிக் பாஷாவை அந்த நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
இது குறித்து சாதிக் பாஷா, கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த முகமது, 20; தினேஷ், 24; புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த கிருபா ஷங்கர், 20; என்பதும், மதுபோதையில், பைக்கில் சென்று, கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள வாகனங்களை சேதப்படுத்தியதும் தெரிய வந்தது.
அதன் பேரில் முகமது, கிருபா ஷங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தினேைஷ தேடி வருகின்றனர்.

