/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் நகைகள் திருடு போனதாக நாடகம் மோசடி செய்ய முயன்ற சென்னை தம்பதி கைது
/
ரயிலில் நகைகள் திருடு போனதாக நாடகம் மோசடி செய்ய முயன்ற சென்னை தம்பதி கைது
ரயிலில் நகைகள் திருடு போனதாக நாடகம் மோசடி செய்ய முயன்ற சென்னை தம்பதி கைது
ரயிலில் நகைகள் திருடு போனதாக நாடகம் மோசடி செய்ய முயன்ற சென்னை தம்பதி கைது
ADDED : நவ 07, 2025 02:01 AM

விழுப்புரம்: ரயிலில், நகைகள் திருடு போனதாக நாடகமாடி, இன்சூரன்ஸ் பணத்தை மோசடியாக பெற திட்டமிட்ட சென்னை தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம், 51; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ருக்மணி, 43. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
சந்தேகம் குடும்பத்துடன் திருவாரூரில் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்திறங்கியவர்கள், தங்கள் பையில் வைத்திருந்த, 296 கிராம் தங்க நகைகள், கடலுார் அருகே வந்த போது மாயமானதாக அழுது புலம்பினர்.
விழுப்புரம் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரித்தனர். 'இவ்வளவு நகை களை ஏன் ரயிலில் எடுத்து வந்தனர்' என, சந்தேகமடைந்த போலீசார், மகாலிங்கம் குடும்பத்தினரிடம் முறையாக விசாரித்தனர்.
கைது அவர்கள் முன்னுக்குப்பின் மு ரணாக பேசியதால், அவர்கள் தங்கியிருந்த ரயில்வே ஓய்வறையில் சோதனையிட்ட போலீசார், அவர்களின் பையில் மறைத்து வைத்திருந்த, 140 கிரா ம் தங்க நகைகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நகை தொலைந்து விட்டதாக மோசடி செய்து, இன்சூரன்ஸ் தொகை பெறும் நோக்கில் நாடகம் ஆடியது தெரிந்தது. இவர்கள், அக்., 21ல், சென்னையில் பிரபல தனியார் நகை கடையில், 200 கிராம் நகைகள் வாங்கி, அதற்கு இன்சூரன்சும் செய்துள்ளனர்.
அந்த நகையை, திருவாரூரில் விற்று விட்டு, ரயிலில் கொள்ளை போனதாக நாடகமாடி, போலீசில் புகாரை பெற்று, இன்சூரன்ஸ் தொகையை பெற திட்டமிட்டு நுாதன மோசடியில் ஈடுபட முயன்றது தெரிந்தது.
இவர்கள், சில மாதங்களுக்கு முன், விஜயவாடாவில் இதே போல, இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபட்டிருந்ததும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார், மகாலிங்கம், ருக்மணியை கைது செய்தனர்.

