/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழங்கால அகல் விளக்குகள் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
/
பழங்கால அகல் விளக்குகள் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
பழங்கால அகல் விளக்குகள் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
பழங்கால அகல் விளக்குகள் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
ADDED : நவ 07, 2025 02:11 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென் பெண்ணையாற்றில், பழங்கால அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டன.
விழுப்புரம் அருகே தளவானுார் தென் பெண்ணையாற்றில், தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் உள்ளிட்டோர் மேற் பரப்பு கள ஆய் வு மேற்கொண்டனர். அப்போது, ஆற்று மணல் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பகுதியில், சுடுமண்ணாலான அகல் விளக்குகள் புதைந்து கிடந்ததை கண்டெடுத்தனர்.
இது குறித்து, இமானுவேல் கூறியதாவது:
சுடுமண் அகல் விளக்குகள், தட்டு வடிவில், நான்கு திரிகளை கொண்டு அழகிய கலைநயத்துடன் சிவப்பு நிறத்தில் உள்ளன.
பழங்காலத்தில் இவை பயன்படுத்தப்பட்டவையாக இருக்கும் என கருதுகிறோம். தமிழகத்தில் தர்மபுரி அருகே பையம்பள்ளி, மோதுார், அப்புகல்லு ஆகிய இடங்களில், கையால் செய்யப்பட்ட பழமையான அகல் விளக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி துரை கீழடி, ஆதிச்சநல்லுார், அரிக்கமேடு, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளிலும், சுடுமண் அகல் விளக்குகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன.
த ற்போது, தளவானுார் தென் பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்ட அகல் விளக்குகள், அரிக்கமேடு பகுதி அகழ்வாய்வுகளில் கண்டறிந்த அகல் விளக்குகளோ டு ஒத்துப்போகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

