/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் 2 பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்
/
மணல் கடத்தல் 2 பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : மே 28, 2025 11:50 PM
வானுார்: கிளியனுார் அருகே மணல் கடத்தலில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
கிளியனுார் அடுத்த எடச்சேரி கிராமத்தில் ஆற்று மணல் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிளியனூர் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது, இருவர் மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்தி செல்வது தெரியவந்தது.
போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, காரட்டை கீழத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன், 35; உப்புவேலுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் ராபின்சன், 34; என தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து, 2 பேரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.