ADDED : அக் 01, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார் குயவன்காடுவெட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஆற்று வாய்க்காலில் இருந்து மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காணை போலீசார் முத்துக்குமரன், 49; தொப்பையன், 57; ஆறுமுகம், 53; மண்ணாங்கட்டி, 60; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், முத்துக்குமரன், ஆறுமுகத்தை கைது செய்தனர்.