ADDED : நவ 22, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
கெடார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் அசோகபுரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரி உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து, ராம்பாக்கத்தைச் சேர்ந்த டிரைவர் வேலன், 30; விக்கிரவாண்டியைச் சேர்ந்த கிளீனர் விக்னேஷ், 31; ஆகிய இருவரையும் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

