/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
/
காரில் மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
ADDED : நவ 09, 2025 05:56 AM

திண்டிவனம்: காரில் மது பாட்டில் கடத்திய 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கொந்தமூர் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் மகன் பாலாஜி, 48; இவர், புதுச்சேரியிலிருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி, சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக, விழுப்புரம் மண்டலம், மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், நேற்று காலை 10:30 மணியளவில், செங்கல்பட்டு அடுத்த பரனுார் டோல்கேட்டில், இன்ஸ்பெக்டர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் இனாய்பாஷா, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த இன்டிகோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த காரில் 540 புதுச்சேரி மாநில மதுபாட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், காரில் வந்தவர்கள் கொந்தமூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, காஞ்சிபுரம் மோகன், 36; என்பதும் தெரிந்தது.
உடன், பாலாஜி, மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து கார், மது பாட்டில்களை மேல் நடவடிக்கைக்காக செங்கல்பட்டு மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

