ADDED : நவ 09, 2025 05:56 AM

மயிலம்: மயிலம் அடுத்த தீவனுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, மயிலம் சேர்மன் யோகேஸ்வரி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவகுமார், இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ் பாபு, துணை இயக்குநர் செந்தில்குமார் துவக்க உரையாற்றினர்.
சிறப்பு விருந்தினர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார்.
முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், பொது, இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு உள்ளிட்ட 17 வகையான மருத்துவ சேவைகளும், எக்கோ கார்டியோ, எக்ஸ்ரே, அலட்ரா சவுண்ட ஸ்கேன், மார்பக புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில நிர்வாகி சிவா, தி.மு.க ., வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் கண்ணன், கிஷோர், மாவட்ட விவசாய அணி சுப்பிரமணியன், ஒன்றிய விவசாய அணி பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி சேகர், தி.மு.க., நிர்வாகிகள் உதயா, பிரபு உட்பட பலர் பங்கேற்றனர் .

