/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ. 1.50 லட்சம் குட்கா கடத்தல் புதுச்சேரி அருகே 2 பேர் கைது
/
ரூ. 1.50 லட்சம் குட்கா கடத்தல் புதுச்சேரி அருகே 2 பேர் கைது
ரூ. 1.50 லட்சம் குட்கா கடத்தல் புதுச்சேரி அருகே 2 பேர் கைது
ரூ. 1.50 லட்சம் குட்கா கடத்தல் புதுச்சேரி அருகே 2 பேர் கைது
ADDED : ஜன 13, 2025 06:11 AM

வானூர் : புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதியில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் போலீசார் நேற்று முன்தினம் நாவற்குளம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் குட்கா விற்பனை செய்த ஜெயா என்ற பெண்ணை கைது செய்து, 12 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில்,புதுச்சேரியில் இருந்து குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று காலை தனிப்படை போலீசார் நாவற்குளம் பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து நாவற்குளம் பகுதிக்கு வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், 22 மூட்டைகளில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அதன் பேரில், ஆட்டோ ஓட்டி வந்த முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சந்திரகுமார், 32; என்பவரை பிடித்து விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் வசிக்கும் கைமாராம், 32; என்பவர் மூலம், குட்கா புகையிலை பொருட்கள் சப்ளை செய்யப்படுவது தெரிய வந்தது.
அதன் பேரில், தனிப்படை போலீசார் சந்திரகுமார், புதுச்சேரியில் இருந்த கைமாராம் ஆகிய இருவரையும் பிடித்து ஆரோவில் போலீசில் ஒப்படைத்தனர்.
ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 160 கிலோ குட்கா புகையிலை பொருட்களையும், ஒரு பைக், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.