/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 2 பேர் கைது
/
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 2 பேர் கைது
ADDED : அக் 12, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனம் ஓட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார், கோனேரிகுப்பம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, நல்லாத்துாரை சேர்ந்த சுப்ரமணி, 31; என்பவர் பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது.
ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதேபோல திண்டிவனம் டவுன் போலீசார், சந்தைமேடு பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டி சென்ற வெண்மணியாத்துாரை சேர்ந்த அசோகன், 38; என்பவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.