ADDED : பிப் 13, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; அனந்தபுரம் அடுத்த மேல் வெங்கமூரில் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள விளக்கு, சொம்பு, குடம், தட்டு உள்ளிட்ட பித்தளை மற்றும் பல்வேறு பூஜை பொருட்களை, சாக்குப்பையில் திருடி மர்ம நபர்கள் இருவர், 'பைக்'கில் தப்ப முயன்றனர்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கி பிடித்து அனந்தபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில்,அவர்கள், விழுப்புரம் பாம்பான்குளம் பகுதியை சேர்ந்த கங்காதரன், 43; ஜெயக்குமார், 51; என தெரிந்தது.
போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். திருடிய பூஜை பொருட்கள் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

