/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது
/
வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது
ADDED : மார் 22, 2025 08:50 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் வெள்ளிக் கடையில் புகுந்து வாலிபரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் சங்கரமடம் வீதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ், 45; இவர், இதே பகுதியில் வெள்ளி கடை வைத்துள்ளார். இந்த கடையில் விழுப்புரம் கைவல்லியர் வீதியைச் சேர்ந்த பிச்சைமுகமது, 53; கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.
இவர், சரியாக பணி செய்யாததால் ஓம்பிரகாஷ் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிச்சைமுகமது தனது சகோதரர் பக்ருதீன், 45; என்பவருடன் சென்று கடையில் இருந்த ஓம்பிரகாஷ் மகன் கோராகுலை, திட்டி கொலை மிரட்டில் விடுத்துள்ளார்.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து பிச்சைமுகமது, பக்ருதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.