/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
ADDED : நவ 10, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம், திருச்சி நெடுஞ்சாலையில் சப் இன்ஸ்பெக்டர்கள் குணசேகர் (தாலுகா), சுதன் (மேற்கு) தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த எல்.ஆர்., பாளையம் தனசேகரன் மகன் விக்னேஷ், 22; அத்தியூர் திருக்கை குப்புசாமி மகன் இருசப்பன், 29; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

