/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கில் வந்தவருக்கு மிரட்டல்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
/
பைக்கில் வந்தவருக்கு மிரட்டல்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
பைக்கில் வந்தவருக்கு மிரட்டல்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
பைக்கில் வந்தவருக்கு மிரட்டல்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
ADDED : நவ 10, 2025 11:10 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வாலிபரை 3 பேர் சேர்ந்து மிரட்டியதால் வாலிபர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்மனேரி மகன் கஜினி, 18; இவர், கடந்த 6ம் தேதி தனது பைக்கில் விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமம் ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே பைக்கில் வந்த 3 பேர் கஜினியின் பைக்கை உரசியடி சென்றனர்.
இதை கஜினி தட்டிக்கேட்டபோது 3 பேரும் தாக்கி மிரட்டியுள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த கஜினி நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து கஜினியை மிரட்டிய அந்த 3 பேரை தேடி வருகின்றனர்.