/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்கக் கோரி நுாதன ஆர்ப்பாட்டம்
/
பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்கக் கோரி நுாதன ஆர்ப்பாட்டம்
பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்கக் கோரி நுாதன ஆர்ப்பாட்டம்
பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்கக் கோரி நுாதன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 10, 2025 11:10 PM

விழுப்புரம்: பொங்கல் பரிசு தொகுப்பில் தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுப்போடு கூடிய மண் பானை இலவசமாக வழங்கக் வேண்டும் என மண்பாண்டம் செய்தபடி நுாதன முறையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் நலச்சங்கம் சார்பில் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார்.
செயலாளர் வினோத், பொருளாளர் ஏழுமலை, சட்ட ஆலோசகர் சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பொங்கல் திருநாளுக்கு, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பரிசு தொகுப்பில் களிமண்ணால் ஆன ஒரு அடுப்பும், புது மண்பானையும் மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
இதன் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றப்படுவதோடு, மண்பா னையில் பொங்கலிடும் மக்களின் மரபு மாறாமல் வழிபாடுகள் நடைபெறும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திலேயே மண்பாண்டம் செய்து நுாதன முறையில் ஈடுபட்டனர்.

