/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை
/
2 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை
ADDED : நவ 26, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பேக்கில் வைத்திருந்த 2 சவரன் நகையை காணவில்லை என இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த கல்பட்டை சேர்ந்தவர் முரளி மனைவி ஆதிலட்சுமி, 35; இவர், நேற்று முன்தினம் சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் தனது பேக்கில் வைத்திருந்த 2 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இது குறித்த புகாரின்பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

