sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரத்தில் பைக் மோதி விபத்து 2 மாணவர்கள் பரிதாப பலி

/

மரத்தில் பைக் மோதி விபத்து 2 மாணவர்கள் பரிதாப பலி

மரத்தில் பைக் மோதி விபத்து 2 மாணவர்கள் பரிதாப பலி

மரத்தில் பைக் மோதி விபத்து 2 மாணவர்கள் பரிதாப பலி


ADDED : பிப் 22, 2024 11:36 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அடுத்த உலகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் வசந்தகுமார்,18; பிளஸ் 2 மாணவர்.

அரசம்பட்டை சேர்ந்தவர் தனஞ்செழியன் மகன் சக்திவேல்,16; சஞ்சீவிராயன் பேட்டையை சேர்ந்தவர் முருகன் மகன் அய்யப்பன்,17; பிளஸ் 1 மாணவர்கள்.

நண்பர்களான 3 பேரும் நேற்று முன்தினம் இரவு எய்யில் கிராமத்தில் நடந்த திருமண விழாவிற்கு, சேத்பட்டிலிருந்து அப்பாச்சி பைக்கில் சென்றனர். பைக்கை வசந்தகுமார் ஓட்டினார்.

அவலுார்பேட்டை மெயின்ரோட்டில் எதுவாய்பேட்டை - எய்யில் கூட்ரோடு அருகே இரவு 9:30 மணிக்கு சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த 3 பேரையும், சேத்பட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வசந்தகுமார் இறந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சக்திவேல் நேற்று அதிகாலை இறந்தார். அய்யப்பன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us