/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கல் 2 டன் பறிமுதல்: உரிமையாளர் கைது
/
ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கல் 2 டன் பறிமுதல்: உரிமையாளர் கைது
ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கல் 2 டன் பறிமுதல்: உரிமையாளர் கைது
ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கல் 2 டன் பறிமுதல்: உரிமையாளர் கைது
ADDED : நவ 20, 2024 05:43 AM

விழுப்புரம் : கஞ்சனுார் அருகே ரைஸ் மில்லில் 2 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த உரிமையாளரை ரவுடிகள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர்.
கஞ்சனுார் அருகே ரைஸ்மில் ஒன்றில், ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, விழுப்புரம் ரவுடிகள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி, இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் நேற்று மதியம் 12:30 மணிக்கு கஞ்சனுார் அருகே கோழிப்பண்ணை கிராமத்தில் உள்ள ரைஸ் மில்லில் சோதனை நடத்தினர்.
அங்கு, காலியாக இருந்த தண்ணீர் தொட்டிகளில் 50 கிலோ கொண்ட 24 ரேஷன் அரிசி மூட்டைகளும், 750 கிலோ ரேஷன் அரிசி அரைத்து வைத்தும் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, இதன் உரிமையாளர் முட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், 62; என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அவர், கிராமத்தில் உள்ள மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அரைத்து மாடுகளுக்கும், கோழி பண்ணைக்கும் தீவனமாக அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
போலீசார், நடராஜன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 2 டன் ரேஷன் அரிசி மற்றும் அரிசி வாங்குவதற்கு பயன்படுத்திய ஒரு லாரி, டாடா ஏஸ் வேனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடராஜன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.