/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோ - மினி லாரி மோதலில் 2 பெண்கள் பலி
/
ஆட்டோ - மினி லாரி மோதலில் 2 பெண்கள் பலி
ADDED : ஜூலை 04, 2025 07:19 AM

திண்டிவனம்; ஆட்டோ மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 37. இவர், நேற்று முன்தினம் இரவு, மனைவி சதா, 21, சகோதரி மகள் பானுஸ்ரீ ஆகியோருடன் ஆட்டோவில் சென்றார். பெலாக்குப்பத்தை சேர்ந்த டிரைவர் மகேஷ்குமார், 25, ஓட்டினார்.
சந்தைமேடு புறவழிச்சாலையில் எட்டியம்மன் கோவில் அருகே சென்றபோது, சென்னை, பரணிபுத்துாரை சேர்ந்த அருள்தாஸ், 28, ஓட்டி வந்த மினி லாரி, ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சதா, பானுஸ்ரீ, பிரித்திவிராஜ், ஆட்டோ டிரைவர் மகேஷ்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சதா இறந்துவிட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானுஸ்ரீ, அங்கு இறந்தார். விபத்தால், திருவண்ணாமலை - திண்டிவனம் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோஷணை போலீசார் மினிலாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.