/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செக்யூரிட்டியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
/
செக்யூரிட்டியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 09, 2025 01:38 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே செக்யூரிட்டியை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் அருகே வி.பதுார் காலனியை சேர்ந்தவர் விஜயரங்கன் மகன் விஜய்சங்கர்,28; இவர் அதே கிராமத்தில் உள்ள மனை பிரிவு ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.
கடந்த 6ம் தேதி இரவு 10:30 மணிக்கு, அதே ஊரை சேர்ந்த ஏகாம்பரம் மகன் அசோக்(எ) ரகோத்தமன்,33; மோகன்ராஜ் மகன் நெப்போலியன்(எ)ராஜூ,28; ஆகியோர் விஜய்சங்கரிடம், அவரது முதலாளியிடம் மனை பிரிவு கமிஷன் கேட்டு வாங்கித்தர வலியுறுத்தி, கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த விளம்பரப் பலகையை உடைத்து சேதப்படுத்தி தாக்கியுள்ளனர். வளவனுா போலீசார் வழக்குப் பதிந்து ராகோத்தமன், ராஜூவை கைது செய்தனர்.