/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
/
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
ADDED : ஏப் 04, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அவலுார்பேட்டையில் நேற்று முன்தினம் மாலை உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கீழ்பென்னாத்துார் சாலையில் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்ற வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவலுார்பேட்டை கணேசன் மகன் தெய்வகுமார் (எ) அப்பு, 25; மல்லவாடி காசி மகன் ராமராஜன், 37; என தெரியவந்தது.
உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

