/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
/
கல்லுாரி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
ADDED : நவ 03, 2024 11:01 PM
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் கஞ்சா, போதை பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். டவுன் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார், நேற்று முன்தினம் கீழ்ப்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லுாரி அருகே சிலர் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில், திடீர் ரோந்து சென்றனர்.
அப்போது, கல்லுாரி அருகே ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடித்து, விசாரணை நடத்தியதில், விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் தாயுமானவர் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் உதயா (எ) உத்திரராஜ், 21; காந்தி நகர் பாஸ்கர் மகன் சந்துரு,21; என்பதும், அவர்கள் அப்பகுதியில் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.மேலும், தப்பியோடிய மோகன் என்பவரை தேடி வருகின்றனர்.