ADDED : ஏப் 02, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா போலீசார், நேற்று ஜானகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பாலத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடம் 750 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், புதுச்சேரி மாநிலம் மடுகரையைச் சேர்ந்த தினேஷ்குமாார், 32; கொங்கம்பட்டைச் சேர்ந்த சேதுராமன், 24; என தெரிந்தது. உடன் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

