/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
/
குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
ADDED : நவ 10, 2025 03:48 AM

விழுப்புரம்: கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களை தாக்கிய வழக்கில் ௨ வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 24; கடந்த மாதம் 9ம் தேதி விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போன்று, விக்கிரவாண்டி அடுத்த வீடூரைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் ராஜேஷ், 22; இவர், கடந்த மாதம் 14ம் தேதி வீடூர் அணை பகுதியில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை தாக்கிய வழக்கில் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரின் நடவடிக்கையையும் தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., சரவணன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், விக்னேஷ், ராஜேஷ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான நகலை, கடலுார் மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.

