/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மீடியனில் பைக் மோதல் வாலிபர்கள் 2 பேர் பலி
/
மீடியனில் பைக் மோதல் வாலிபர்கள் 2 பேர் பலி
ADDED : பிப் 16, 2024 02:42 AM

திண்டிவனம்:சென்னை குன்றத்துார் அடுத்த நல்லுாரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாலாஜி 23 எலக்ட்ரீஷியன். அதே பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் கார்த்திக் 24 மினி சரக்கு வேன் டிரைவர். நண்பர்களான இருவரும் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் பைக்கில் சேலம் சென்று அங்கிருந்து இரவு சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 1:45 மணிக்கு சென்னை சாலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சலவாதி அருகே அதிவேகமாக வந்தபோது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து மீடியனில் மோதி சாலையோரம் இருந்த மைல் கல் மீது மோதியது. இதில் இருவரும் 50 மீட்டருக்கு துாக்கி வீசப்பட்டனர். அதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் இறந்த இருவருக்கும் திருமணமாகவில்லை. விபத்து குறித்து ரோஷணை போலீசார் விசாரிக்கின்றனர்.