/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கதண்டு கடித்து 20 பேர் காயம் ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் பரபரப்பு
/
கதண்டு கடித்து 20 பேர் காயம் ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் பரபரப்பு
கதண்டு கடித்து 20 பேர் காயம் ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் பரபரப்பு
கதண்டு கடித்து 20 பேர் காயம் ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் பரபரப்பு
ADDED : ஏப் 12, 2025 05:18 AM

முஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் கதண்டு கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திரம் என்பதாலும், கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடந்ததால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், கோவில் ராஜகோபுரத்தில் இருந்த கதண்டு கூடு திடீரென கலைந்து, கோவிலில் இருந்த பக்தர்களையும், திருமணத்திற்கு வந்தவர்களையும் கடித்ததால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு நிலவியது.
அதில், மா.காடுவெட்டி இன்பவள்ளி, செல்வி, தழிழரசன், பெரியகிருஷ்ணாபுரம் புகழேந்தி, ஸ்ரீமுஷ்ணம் நாகராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்த பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், கவுன்சிலர் சதீஷ்குமார், கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் மற்றும் ஜெயங்கொண்டம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

