/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் திருட்டு
ADDED : ஜன 08, 2025 06:16 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணைநல்லுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பூசாரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கார்த்திக், 30; செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்காலிக கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவர் நேற்று காலை அவரது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதை அடுத்து கார்த்திக் மதியம் 2:00 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வர வைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்ச சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.