/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 21 சவரன் திருட்டு
/
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 21 சவரன் திருட்டு
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 21 சவரன் திருட்டு
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 21 சவரன் திருட்டு
ADDED : ஜூலை 31, 2025 04:01 AM
விழுப்புரம்:ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 21 சவரன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள சேர்ந்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் தண்டாயுதபாணி, 75; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ரயில் நிலையம் அருகே மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் வீட்டின் கதவுகளை மூடிவிட்டு, குடும்பத்தினருடன் மாடியில் உள்ள முன் பகுதி அறையில் படுத்து தூங்கினார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் அவர் வீட்டின் பின்பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டின் அறைக்குள் இருந்த பீரோவினை உடைத்து அதிலிருந்த 21 சவரன் மற்றும் 2 லட்சம் ப ணத்தை திருடி சென்றனர்.
தகவல் அறிந்த வளவனுார் போலீசார் விரைந்து வந்து, மோப்ப நாய், தடயவியல் நிபுணர் உதவியுடன், வீட்டில் தடயங்களை சேகரித்து விசாரித்தனர்.
இதுகுறித்த புகாரில் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.