/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 21,836 பேர் பங்கேற்பு! 105 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 21,836 பேர் பங்கேற்பு! 105 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 21,836 பேர் பங்கேற்பு! 105 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 21,836 பேர் பங்கேற்பு! 105 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்
ADDED : மார் 04, 2025 06:49 AM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் பிளஸ் 2 தேர்வு துவங்கியது. 105 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்து 836 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், நேற்று துவங்கி வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக, விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய இரு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தில் 121 அரசு பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் பள்ளிகள், 54 தனியார் பள்ளிகள் என மொத்தம் 192 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 665 மாணவர்கள், 11 ஆயிரத்து 171 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 836 பேர் நேற்று 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.
இத்தேர்வை கூடுதலாக ஒரு மணி நேரம் எழுதுவதற்கு 278 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து 197 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கண் பார்வை, செவித்திறன் குறைபாடு, மனநலன் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறு உடைய மாணவர்கள் 278 பேருக்கு, சொல்வதை கேட்டு எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
மாணவர்களுக்காக அவர்கள் தேர்வு எழுதினர். 15 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தரைத்தளத்தில் அமர்ந்து தேர்வெழுதிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும், 217 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 106 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 106 துறை அலுவலர்கள், 28 வழித்தட அலுவலர்கள்,140 பறக்கும்படை அலுவலர்கள், 1,200 அறை கண்காணிப்பாளர்கள், 310 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 2,385 பேர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதைத் தவிர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார்.
அப்போது சி.இ.ஓ., அறிவழகன், நேர்முக உதவியாளர் பெருமாள் உடனிருந்தனர்.
தேர்வு மையங்களில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில், தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன.