/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது 22,165 மாணவர்கள் பங்கேற்பு
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது 22,165 மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது 22,165 மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது 22,165 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : மார் 05, 2024 05:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 165 மாணவ, மாணவிகள் எழுதினர்.
பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48, விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்கள் என 104 மையங்களில் நடந்தது.
121 அரசு பள்ளிகள், 17 அரசு உதவி பெறும் பள்ளிகள், 57 தனியார் பள்ளிகள் என 195 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்த 843 மணவர்களும், 11 ஆயிரத்து 322 மாணவிகளும் எழுதினர்.கண்காணிப்பு பணிகளில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என 2,400 பேர் மற்றும் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டறிய பறக்கும் படை குழுவினர் 90 பேர் ஈடுபட்டனர்.
இது மட்டுமின்றி, சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் ராமன் தலைமையிலும், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் தலைமையில் தனித்தனியே பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்பட்டது.

