/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் சாலை மறியல் 225 கிராம உதவியாளர்கள் கைது
/
விழுப்புரத்தில் சாலை மறியல் 225 கிராம உதவியாளர்கள் கைது
விழுப்புரத்தில் சாலை மறியல் 225 கிராம உதவியாளர்கள் கைது
விழுப்புரத்தில் சாலை மறியல் 225 கிராம உதவியாளர்கள் கைது
ADDED : பிப் 10, 2026 04:26 AM

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் 225 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் டி கிரேடு வாங்கு வதற்கும், கடந்த 40 ஆண்டு களாக கிராம உதவியாளர்களை வஞ்சித்துவருவதை கண்டித்தும் கடந்த 5ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக நேற்று, உதவியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, மதியம் 1:05 மணியளவில், கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் எதிரில் சென்னை நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட 52 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.