/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ குட்கா அழிப்பு
/
வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ குட்கா அழிப்பு
வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ குட்கா அழிப்பு
வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ குட்கா அழிப்பு
ADDED : மார் 03, 2026 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் உட்கோட்டத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் அழித்தனர்.
விழுப்புரம் உட்கோட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லுார், திருவெண்ணெய்நல்லுார், காணை காவல் நிலைய வழக்குகளில் குட்கா பொருட்கள் 2,501 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை நீதிமன்ற உத்தரவின் பேரில், எஸ்.பி., சாய் பிரனீத் தலைமையில் பேரூராட்சி அலுவலர், வி.ஏ.ஓ.,க்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோரின் உதவியோடு நேற்று அழிக்கப்பட்டது.
அரகண்டநல்லுார் பேரூராட்சி குப்பை கிடங்கில், 2,501 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை போலீசார் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.