/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
/
பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
ADDED : பிப் 17, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதியில் பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீடூர் பள்ளி அருகே கஞ்சா விற்ற வீடூர் புது காலனியைச் சேர்ந்த சரத், 26; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று விக்கிரவாண்டியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற உஸ்மான் நகர் அஜய், 22; சென்னை, கொளப்பாக்கம் பிரேம்குமார், 20; ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.