ADDED : நவ 26, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே சிந்தாமணி, அரசூர் அருகே ஆனத்துார் கிராம பகுதிகளில், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிந்தாமணி சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 21; என்பவரை கைது செய்தனர்.
இதே போல், ஆனத்துார் ஏரிக்கரை அருகில் கஞ்சா விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த நிர்மல், 20; ராஜா,19; ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மூவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது.

