/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவர்கள் பேக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
/
பள்ளி மாணவர்கள் பேக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
பள்ளி மாணவர்கள் பேக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
பள்ளி மாணவர்கள் பேக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
ADDED : நவ 26, 2025 07:24 AM

விழுப்புரம்: பள்ளி மாணவர்கள் புத்தக பேக்கில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகே மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி சீருடையில் இரண்டு குழந்தைகளை பைக்கில் ஏற்றி வந்த நபரை மடக்கி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், விழுப்புரம் நந்தனார் தெருவை சேர்ந்த பரத் (எ) பர்வீன், 30; என்பதும், பள்ளி மாணவர்களின் புத்தக பேக்கில் 316 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து பரத் என்கிற பர்வீனை கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.