/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.6.90 லட்சம் குட்கா பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
/
ரூ.6.90 லட்சம் குட்கா பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
ரூ.6.90 லட்சம் குட்கா பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
ரூ.6.90 லட்சம் குட்கா பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
ADDED : ஜன 12, 2025 05:17 AM

விழுப்புரம் : திண்டிவனம் அருகே போலீசார் நடத்திய சோதனையில், ரூ.6.90 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோஷனை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார், நேற்று வாகன சோதனை நடத்தினர்.
திண்டிவனம் - வந்தவாசி சாலையில் பட்டணம் கூட்ரோடு அருகே வேகமாக சென்ற காரை நிறுத்தி, போலீசார் சோதனை மேற் கொண்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜோதிராஜ்,32; அச்சரப்பாக்கத்தை சேர்ந்த தனசேகரன்,42; ஆகிய இருவரும் 250 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.2.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்திய இருவரையும் கைது செய்தனர்.
ஒலக்கூர்
ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஓங்கூர் சோதனை சாவடி அருகே ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திச் சென்ற ராஜஸ்தான் மாநிலம், ஜோலார் மாவட்டத்தைச் சேர்ந்த கான்சிராம் மகன் ராம்,23; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரூ.4.40 லட்சம் மதிப்பிலான 440 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.