/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒலக்கூர் அருகே வாலிபர் கொலை தேனியை சேர்ந்த 3 பேர் கைது
/
ஒலக்கூர் அருகே வாலிபர் கொலை தேனியை சேர்ந்த 3 பேர் கைது
ஒலக்கூர் அருகே வாலிபர் கொலை தேனியை சேர்ந்த 3 பேர் கைது
ஒலக்கூர் அருகே வாலிபர் கொலை தேனியை சேர்ந்த 3 பேர் கைது
ADDED : ஆக 18, 2025 04:14 AM

விழுப்புரம்: ஒலக்கூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தேனியை சேர்ந்த தந்தை, தாய், மகளை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அருகே பாதிரி கிராமத்தில் ஏரிக்கரை அருகே கடந்தாண்டு ஏப்., 1ம் தேதி கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது.
ஒலக்கூர் போலீசார உடலை கைப்பற்றி, கொலை வழக்குப் பதிந்தனர். கொலை செய்யப்பட்ட நபர் குறித்து விசாரித்து வந்தனர்.
திண்டிவனம் டி.எஸ்.பி., பிரகாஷ் மேற்பார்வை யில் பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தேனி மாவட்டம், எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜோதிமணி, 30; என்பது தெரியவந்தது. மேலும், ஜோதிமணி, அதே கிராமத்தை சேர்ந்த உமா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது.
உமாவிற்கு திருமணமாக பிறகும் அவரை தொந்தரவு செய்துள்ளார். இதனால், உமா குடும்பத்தார், ஜோதிமணியை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதையடுத்து, தந்தை மாரியப்பன், தாய் பஞ்சவர்ணம் மற்றும் உமா ஆகிய மூவரும், ஜோதிமணியை கடந்தாண்டு மார்ச்., 31ம் தேதி இரவு டாடா ஏஸ் வாகனம் மூலம், ஒலக்கூர் அடுத்த பாதிரி கிராம ஏரிக்கரை அருகே அழைத்து வந்து, கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளிமலை மகன் மாரியப்பன்,58; அவரது மனைவி பஞ்சவர்ணம், 43; மகள் உமா,25; ஆகியோர் மீது ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.