/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
/
பைக் திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
ADDED : அக் 31, 2025 02:31 AM
வானுார்:  கிளியனுார் அருகே பைக் திருடிய இரு சிறு வர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சிங் நாயக். அவர், திண்டிவனம் - புதுச்சேரி பைபாஸ் சாலையில், தங்கி வேலை செய்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் அருவாப்பாக்கம் அருகே உள்ள ஓட்டலில் தனது பைக்கை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.
தொடர்ந்து வெளியே வந்து பார்த்தபோது, அவரது பைக் காணாமல் போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கிளியனுர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில், போலீசார், திண்டிவனம் அடுத்த ஆவணம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன், 20; என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவரும், திண்டிவனம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இரு சிறுவர்களும் சேர்ந்து, பைக் திருடியதை ஒப்புக்கொண்டனர்.  இரு சிறுவர்கள் உட்பட மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.  மணிகண்டன் மீது மயிலம் போலீஸ் நிலையத்தில் இரு பைக் திருட்டு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

