/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் கத்தியுடன் கொலை செய்ய வந்த பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது விழுப்புரம் அருகே பரபரப்பு
/
காரில் கத்தியுடன் கொலை செய்ய வந்த பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது விழுப்புரம் அருகே பரபரப்பு
காரில் கத்தியுடன் கொலை செய்ய வந்த பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது விழுப்புரம் அருகே பரபரப்பு
காரில் கத்தியுடன் கொலை செய்ய வந்த பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது விழுப்புரம் அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 06, 2025 04:24 AM

விக்கிரவாண்டி: பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை
கொலை செய்ய காரில் வந்த பிரபல ரவுடி உள்ளிட்ட, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் மணிபாலன், 42; இவர் திண்டிவனத்தை சேர்ந்த பைனான்சியர் செந்தில்குமார், 47; என்பவரிடம், சென்னையை சேர்ந்த ரகுராமன் என்பவருக்கு சொந்தமான வங்கி லாக்கரில், 93 கோடி ரூபாய் இருப்பதாகவும், அதை அடுத்த ஆண்டு எடுக்க முடியும் எனக்கூறி, கடன் கேட்டார்.
இதையடுத்து ரகுராமனின் 'லாக்கர்' சாவி மற்றும் வங்கி கார்டை, செந்தில்குமாரிடம் அடகு வைத்து, 15 லட்சம் ரூபாயை வாங்கி அவரிடம் தந்தார். இந்த சாவி மற்றும் கார்டு போலி என தெரிய வந்தது.
அதனால் செந்தில்குமார் உடனடியாக பணத்தை திருப்பி தரும்படி, மணிபாலனிடம் கேட்டார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.
இது குறித்து செந்தில் குமார் கடந்த சில தினங்களுக்கு முன், மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், மணிபாலன் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மணிபாலனை கொலை செய்ய திட்ட மிட்டு செந்தில்குமார், சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி நவீன்,29; மற்றும் ஓட்டேரியை சேர்ந்த சையது, 27; ஆகிய இருவரையும் காரில் அழைத்து கொண்டு, நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு முண்டியம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த காரை ஓட்டேரியை சேர்ந்த மணிகண்டன்,32: என்பவர் ஓட்டி வந்தார்.
விக்கிரவாண்டி டோல்பிளாசா அருகே வந்த போது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், காரை நிறுத்தினர். அப்போது டிரைவர் மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
தொடர்ந்து போலீசார் காரில் சோதனையிட்ட போது, அதில் பட்டா கத்தி இருந்தது தெரிந்தது. விசாரணையில் மணிபாலனை கொலை செய்ய திட்டமிட்டதும் கண்டறியப்பட்டது.
விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தார். கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர் .