ADDED : நவ 03, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் பகுதியில் புதுச்சேரி மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 43; இவர், புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர்.
அதே போல் கோட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கர்ணகி, 38; மற்றும் நடுக்குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் மகன் குணசெல்வம் புதுச்சேரி மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிந்து மரக்காணம் போலீசார் கைது செய்தனர்.