/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
/
மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
ADDED : ஜூலை 18, 2025 05:02 AM

செஞ்சி: செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து மேலும் 3 ஆடுகள் இறந்தன.
செஞ்சி பகுதி கிராமங்களில் கடந்த சில மாதமாக மர்ம விலங்கு கால்நடைகளை கடித்து வருகிறது.
கடந்த மாதம் 27ம் தேதி முதல் இரவு கொங்கரப்பட்டு, ரெட்டணை, அவியூர், வீரணாமூர் உள்ளிட்ட கிராமங்களில் அடுத்தடுத்து ஆடு, கன்று குட்டிகளை அந்த விலங்கு தாக்கி 20க்கும் மேற்பட்ட கால் நடைகள் இறந்தன.
இதையடுத்து செஞ்சி வனத்துறையினர் அந்த விலங்கை கண்டறிய பல இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தியுள்ளனர். பல்வேறு இடங்களில் அதை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அவியூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை 54, என்பவரின் விவசாய நிலத்தில், கொட்டையில் கட்டி இருந்த, வெள்ளாடுகளை மர்ம விலங்கு கடித்தது.
இதில் மூன்று ஆடுகள் இறந்தன. தகவல் அறிந்த செஞ்சி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்பகுதியில் குண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.