/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி
/
வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி
ADDED : ஜூலை 04, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர்: கிளியனுார் அருகே வெறி நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
கிளியனுார் அடுத்த எடையான்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 30; கூலித்தொழிலாளி. இவர், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை வீட்டிற்கு பின்புறம் அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில், அந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறின. இதில், 3 ஆடுகள் உயிரிழந்தன.
எறையானுார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஓமந்துார் உதவி மருத்துவர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்து ஆடுகள் புதைக்கப்பட்டன. அப்பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.