sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரிடம் செயின் திருட்டு திருநங்கைகள் 3 பேர் கைது

/

வாலிபரிடம் செயின் திருட்டு திருநங்கைகள் 3 பேர் கைது

வாலிபரிடம் செயின் திருட்டு திருநங்கைகள் 3 பேர் கைது

வாலிபரிடம் செயின் திருட்டு திருநங்கைகள் 3 பேர் கைது


ADDED : நவ 08, 2025 02:12 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணத்தில் வாலிபரிடம் செயின் திருடிய வழக்கில் 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

கெடார் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 34; இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி சென்னையில் இருந்து பைக்கில் இ.சி.ஆர்., வழியாக கெடார் வந்து கொண்டிருந்தார்.

மரக்கா ணம் தீர்த்தவாரி அருகே அவரது பைக் பழுதானது. அப்போது அந்த வழியாக காரில் வந்த திருநங்கைகள் 3 பேர் அவருக்கு உதவி செய்வதாக கூறி ராமச்சந்திரன் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தீர்த்தவாரி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், கடலுாரைச் சேர்ந்த சிவகுரு மகள் லாவண்யா, 31; கொளஞ்சி மகள் நிஷா, 30; எட்வர்ட் ஜார்ஜ் மகள் ஜெரினா, 24; என்பதும் மூன்று பேரும் திருநங்கைகள் எனவும், கடந்த 2ம் தேதி கெடார் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரனிடம் இருந்து 2 சவரன் செயினை பறித்துச் சென்றது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்த 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து செயினை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us