/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்

ADDED : நவ 08, 2025 02:11 AM
விக்கிரவாண்டி: வீடூரில் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு மா.கம்யூ., கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
வீடூர் கிராமத்தில் கடந்த 2023ம் ஆண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில், நேற்று மா.கம்யூ., சார்பில் கிளைச் செயலாளர் மூவேந்தன் தலைமையில் நீர் தேக்க தொட்டிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கெஜமூர்த்தி, ஒன்றிய குழு பழனி, காளிதாஸ், தமிழரசன், கிளைச் செயலாளர்கள் பாஸ்கர், பிரகாஷ், மகாதேவன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.