/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனை ஊழியரிடம் பர்ஸ் திருடிய 3 பெண்கள் கைது
/
அரசு மருத்துவமனை ஊழியரிடம் பர்ஸ் திருடிய 3 பெண்கள் கைது
அரசு மருத்துவமனை ஊழியரிடம் பர்ஸ் திருடிய 3 பெண்கள் கைது
அரசு மருத்துவமனை ஊழியரிடம் பர்ஸ் திருடிய 3 பெண்கள் கைது
ADDED : மார் 20, 2025 05:17 AM

திண்டிவனம்: அரசு மருத்துவமனை ஊழியரிடம் பர்சை திருடிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி தாலுகா, மாவலவாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி மனைவி சாந்தி, 55; இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை விழுப்புரதத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து திண்டிவனத்திற்கு வரும் பஸ்சில் சாந்தி ஏறியுள்ளார்.
நேற்று காலை 9.30 மணிக்கு திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பெண்கள் அவரது பர்சை திருடிய போது, அவர் கூச்சல் போட்டார். உடனே அருகிலிருந்தவர்கள் மூன்று பெண்களை பிடித்து திண்டிவனம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். டவுன் போலீசார் விசாரணைக்கு பிறகு பிடிபட்ட திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, கட்டமடுவு கிராமத்தை சேர்ந்த சத்யா, 46 ;விஜயா, 34; அமுலு, 46; ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது. திண்டிவனம் டவுன் போலீசார் மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.