/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ குட்கா பறிமுதல்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஏப் 28, 2025 05:51 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் ரயிலில் கடத்திவரப்பட்ட 30 கிலோ குட்கா புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையம், 5வது பிளாட்பாரத்திற்கு, நேற்று மாலை 6:55 மணிக்கு நிஜாமுதின் - கன்னியாகுமரி நோக்கி செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வந்தது. இந்த ரயில் பெட்டிகளில், ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் ரயில் பெட்டி கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில் வெள்ளை நிற சாக்கு பை கிடந்தது. அதனை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்த குட்கா 30 கிலோ இருந்தது. போலீசார் குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர்.
ரயிலில் குட்கா கடத்திய நபர் பற்றி, விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.